
ஆனால் பேஸ்புக் இப்போது பேஃக் புக்(FAKE) ஆகிக்கொண்டு செல்கிறது என்றுகூறினால் பிழையில்லை. ஹக்கிங் செய்வதும் மிக இலகுவாக்கப்பட்டிருக்கிறது. பலர் எப்படி ஹக் பண்ணுவது என்று விளக்கம் கொடுத்து வீடியோ கூட வெளியிட்டுள்ளனர்.
எமது STATUS UPDATEகளுக்கு இரகசியத்தன்மை(privacy) வழங்கும் பேஸ்புக் இதற்கும் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது. அதுமட்டுமன்றி பாவனையாளர்களுக்கே APPLICATIONனளை உருவாக்கும் வசதியை இது வழங்குவதால் பேஸ்புக் வைரஸ் பரப்புவது இலகுவாகிவிட்டது. தற்போது புதிதாக பேஸ்புக்கில் காணப்படும் வீடியோ அரட்டை(VIDEO CHATTING) முலம் வைரஸ் பரப்பப்படுவதாக பாதிக்கப்பட்ட நண்பர்கள் கூறினார்கள்.
நேரடியாகக்கண்ட பேஸ்புக் வைரஸ்நான் எனது நண்பர்கள் சிலரை ஒரு லிஸ்ட்டில் வைத்திருக்கிறேன். வழமையாக முஞ்சிப்புத்தக அரட்டையில் உள்ளோரின் பகுதியில் அந்த லிஸ்ட்டில் உள்ளோர் வேறாகவும் மற்ற நண்பர்கள் வேறாகவும் காட்டப்படும். ஆனால் அன்று இரண்டு இடங்களிலும் ஒரே நண்பரின் பெயரைக்காட்டியது. நான்கூட ஒருமுறை பேஸ்புக்கால் அறிவுறுத்தப்பட்டேன்.
ஆனால் பேஸ்புக் அறிவுறுத்தல் என்ற பெயரில் சில வேளைகளில் வைரசும் தாக்கலாம். எனவே பேஸ்புக் பாவனையாளர்கள் தேவையற்ற குழுமங்களில் சேருவதையோ, தெரியாத நபர்களை நண்பர்குழுமத்தில் இணைப்பதையோ தவிர்த்துக்கொண்டால் உங்கள் பேஸ்புக்கை ஓரளவு காப்பாற்றிக்கொள்ளலாமே தவிர இதுவரை எந்தத் தீர்வையும் எடுக்காத பேஸ்புக் நிர்வாகம் இதற்கு இனியும் எந்தவித தீர்வையும் எடுக்கப்போவதில்லை.