2010-02-11

டிவிட்டர் Vs பேஸ்புக்


டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி

டிவிட்டர் இண்டெர்நெட்டில் கால் வைத்ததில் இருந்தே பேஸ்புக்கு கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் எண்டிரி ஆனவுடன் பலரும் கூறி வந்த கருத்து இனி பேஸ்புக் எல்லாம் வேஸ்ட் தான் என்று ஆனால் இன்று விட்ட இடத்தை சரியான நேரத்தில் பிடித்து கொண்டு வருகிறது.

டிவிட்டர்-ல் இல்லாத பல சேவைகளை பேஸ்புக் சமீபகாலமாக அதிகப்படுத்தியுள்ளது இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் முன்பு எல்லாம் பேஸ்புக் இனையதளத்தை திறந்தால் திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் ஆனால் இன்று அதிவேக இண்டெர்நெட் இல்லாத கணினியிலும் வேகமாகவே தெரிகிறது. அதோடு நாம் பேஸ்புக்-ல் பயன்படுத்தும் படத்தின் அளவையும் கூட்டியுள்ளது.

நாம் டிவிட்டரில் ஷாட் யூஆரல் ( சுருக்கப்பட்ட முகவரி) பயன்படுத்துவோம் ஆனால் சில நேரங்களில் இது வைரஸ் அல்லது ஆபாச இணையதளங்களுக்கு செல்கிறது எத்தனை பயர்வால் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சினை இன்னும் தீரவில்லை அதோடு சமீபத்தில் தான் டிவிட்ட்ரை ஹக்கர் விளையாட்டு பொருளாக்கி டிவிட்டர் பயனாளர்கள் அனைவரையும் அச்சப்படுத்தினர்.

இதிலிருந்து இப்போது தான் மீண்டு வருகிறது இது தான் தனக்கு சாதகமான காலகட்டம் என்று பேஸ்புக் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சலுகைகள் என்று அள்ளிவிடுகிறது. பேஸ்புக் பயன்படுத்தி கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் சமீபத்தில் பேஸ்புக்-ல் வரும் மாற்றங்கள் அனைத்தும் புதுமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டிவிட்டரும் தன்பங்கிற்கு டிவிட் லோக்கேசன் என்பதையும் சேர்த்துள்ளது. டிவிட்டருக்கும் பேஸ்புக்கிற்கும் நடுவில் இப்படி ஒரு மறைமுக யுத்தம் நடைபெற்று வருகிறது இதனால் பயன் அடைவது நாம் என்ற மகிழ்ச்சி தான் இப்போது நமக்கு உள்ளது.

விரைவாக பார்க்க பேஸ்புக் சேமிக்கும் புகைப்படத்தின் அளவை அதிகப்படுத்தியுள்ளது


பல நாள் கோரிக்கை இறுதியாக இப்போது தான் பேஸ்புக்
தனது நெட்வொர்க்கில் சேமிக்கும் படத்தின் உயரம் மற்றும்
அகலத்தை அதிகரித்துள்ளது. அதிகமான பயனாளர்களை கொண்டு
உலகத்தில் வலம் வரும் பேஸ்புக் கடந்த சில நாட்களாகவே
புகைப்படத்தின் அளவை அதிகப்படுத்தபோவதாக அறிவித்துவந்தது பல நாள் கோரிக்கை இறுதியாக இப்போது தான் பேஸ்புக்
தனது நெட்வொர்க்கில் சேமிக்கும் படத்தின் உயரம் மற்றும்
அகலத்தை அதிகரித்துள்ளது. அதிகமான பயனாளர்களை கொண்டு
உலகத்தில் வலம் வரும் பேஸ்புக் கடந்த சில நாட்களாகவே
புகைப்படத்தின் அளவை அதிகப்படுத்தபோவதாக அறிவித்துவந்தது

இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதாவது படத்தின்
அகலம் 180 உயரம் 540 (180×540) என்று அளவை தான் இதுவரை
பேஸ்புக் -ல் நாம் பயன்படுத்தி வந்தோம் ஆனால் இனி அகலம் 200
மற்றும் உயரம் 600 என்று படத்தின் உயரம் மற்றும் அகலத்தை
அதிகப்படுத்தியுள்ளது. பிளிக்கர் போன்ற இணையதளங்களில் இருந்து
நாம் அப்லோட் செய்யும் புகைப்படத்தின் அளவும் இனி இந்த அளவாக
மாற்றப்பட்டுவிடும்.இதற்காக பேஸ்புக்-ல் கூடுதலாக சேமிக்கும்
இடத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.

2009-12-24

மூஞ்சிப்புத்தகத்தில் தலைவிரித்தாடும் FAKE PROFI

இணைப்பாவனையாளர்கள் யாருமே இந்தப் பேஸ்புக்கை பாவிக்காமல் இருந்திருக்கமுடியாது. ஒரு சமுக தளமாகக்காணப்படும் இது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை இங்கே சிறியவர்முதல் பெரியவர் கட்டுண்டு கிடக்கின்றனர். FARM VILLA, BARN BUDDY, CAFE WORLD போன்ற எக்கச்சக்க விளையாட்டுக்கள், அதுமட்டுமன்றி இலவசமாக செலவில்லாமல் பரிசு கூட வழங்கலாம். இப்படியான வசதிகள் பல காணப்படுவதாலேதான். இது அதிகமாக எல்லோராலும் விரும்பப்படுகிறதோ என்னாவொ
ஆனால் பேஸ்புக் இப்போது பேஃக் புக்(FAKE) ஆகிக்கொண்டு செல்கிறது என்றுகூறினால் பிழையில்லை. ஹக்கிங் செய்வதும் மிக இலகுவாக்கப்பட்டிருக்கிறது. பலர் எப்படி ஹக் பண்ணுவது என்று விளக்கம் கொடுத்து வீடியோ கூட வெளியிட்டுள்ளனர்.


எமது STATUS UPDATEகளுக்கு இரகசியத்தன்மை(privacy) வழங்கும் பேஸ்புக் இதற்கும் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது. அதுமட்டுமன்றி பாவனையாளர்களுக்கே APPLICATIONனளை உருவாக்கும் வசதியை இது வழங்குவதால் பேஸ்புக் வைரஸ் பரப்புவது இலகுவாகிவிட்டது. தற்போது புதிதாக பேஸ்புக்கில் காணப்படும் வீடியோ அரட்டை(VIDEO CHATTING) முலம் வைரஸ் பரப்பப்படுவதாக பாதிக்கப்பட்ட நண்பர்கள் கூறினார்கள். நேரடியாகக்கண்ட பேஸ்புக் வைரஸ்
நான் எனது நண்பர்கள் சிலரை ஒரு லிஸ்ட்டில் வைத்திருக்கிறேன். வழமையாக முஞ்சிப்புத்தக அரட்டையில் உள்ளோரின் பகுதியில் அந்த லிஸ்ட்டில் உள்ளோர் வேறாகவும் மற்ற நண்பர்கள் வேறாகவும் காட்டப்படும். ஆனால் அன்று இரண்டு இடங்களிலும் ஒரே நண்பரின் பெயரைக்காட்டியது. நான்கூட ஒருமுறை பேஸ்புக்கால் அறிவுறுத்தப்பட்டேன்.


ஆனால் பேஸ்புக் அறிவுறுத்தல் என்ற பெயரில் சில வேளைகளில் வைரசும் தாக்கலாம். எனவே பேஸ்புக் பாவனையாளர்கள் தேவையற்ற குழுமங்களில் சேருவதையோ, தெரியாத நபர்களை நண்பர்குழுமத்தில் இணைப்பதையோ தவிர்த்துக்கொண்டால் உங்கள் பேஸ்புக்கை ஓரளவு காப்பாற்றிக்கொள்ளலாமே தவிர இதுவரை எந்தத் தீர்வையும் எடுக்காத பேஸ்புக் நிர்வாகம் இதற்கு இனியும் எந்தவித தீர்வையும் எடுக்கப்போவதில்லை.

2009-10-26

FUNNYFUNNYFUNNYFUNNYFUNNYFUNNYFUNNYFUNNYFUNNY